Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிர்வாகப் பொறுப்பிலும் அதற்கு மேலான பதவியிலும் உள்ள ஊழியர்களுக்குச் சம்பள முடக்கம் - CapitaLand

நிர்வாகப் பொறுப்பிலும் அதற்கு மேலான பதவியிலும் உள்ள ஊழியர்களின் சம்பளம் முடக்கப்படுவதாக CapitaLand நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நிர்வாகப் பொறுப்பிலும் அதற்கு மேலான பதவியிலும் உள்ள ஊழியர்களுக்குச் சம்பள முடக்கம் - CapitaLand

(படம்: AFP/Theresa Baraclough)

நிர்வாகப் பொறுப்பிலும் அதற்கு மேலான பதவியிலும் உள்ள ஊழியர்களின் சம்பளம் முடக்கப்படுவதாக CapitaLand நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வாரிய உறுப்பினர்களுக்கான (Board Members) வாரியக் கட்டணம், மூத்த நிர்வாகிகளின் அடிப்படைச் சம்பளம் ஆகியவை 5 முதல் 15 விழுக்காடு வரை குறைக்கப்படும்

அது ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். 6 மாதங்களுக்குப் பிறகோ கிருமித் தொற்று நிலவரம் மேம்பட்ட பிறகோ, அது மீண்டும் பரிசீலிக்கப்படும்.

COVID-19 கிருமிப்பரவல், நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பாதித்துள்ளதாக CapitaLand குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ சீ கூன் (Lee Chee Koon) கூறினார்.

வர்த்தகங்கள் மீதான தாக்கம், கிருமிப்பரவல் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருக்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், சிங்கப்பூரையும் சீனாவையும் பொறுத்தவரை நீண்டகால அடிப்படை அம்சங்களில் தொடர்ந்து சாதகமான கண்ணோட்டமே கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்