Images
  • car crash
    (படம்: Facebook/Five Square)

உணவகத்தின் கண்ணாடி முகப்பில் மோதிய கார்

பிக்கரிங் ஸ்ட்ரீடில் அமைந்துள்ள FIVE Square உணவகத்தின் கண்ணாடி முகப்பில் கார் ஒன்று மோதியது.

அந்த விபத்தில் 53 வயது பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் அந்தக் காரில் பயணம் செய்த பயணி எனக் கூறப்பட்டது. பின்னர் அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இன்று (செப்டம்பர் 13) நிகழ்ந்த அந்த விபத்தின் காணொளி ROADS.sgஇன் Facebook பக்கத்தில் பதிவாகியுள்ளது.

கார் ஓட்டுநருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்த அந்த 53 வயது மாது, விபத்துக்குப்பின் சுய நினைவுடன் இருந்தது காணொளியில் பதிவானது.

சம்பவம் நிகழ்ந்தபோது, உணவகத்தில் யாரும் இல்லை.  

 

Top