Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாகனக் கதவைத் திறந்ததில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரைக் கீழே தள்ளி மரணத்தை ஏற்படுத்திய ஆடவருக்குச் சிறை

வாகனத்தின் கதவைத் திறந்தபோது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவரைக் கீழே தள்ளி அவர் மாண்ட சம்பவத்தில் 36 வயது ஆடவருக்கு இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

வாகனத்தின் கதவைத் திறந்தபோது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவரைக் கீழே தள்ளி அவர் மாண்ட சம்பவத்தில் 36 வயது ஆடவருக்கு இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வாகனத்திற்கு அருகே 27 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் இருந்தார்.

கதவில் மோதிக் கீழே விழுந்த அவருக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

விபத்து ஏற்பட்ட நாளன்றே மலேசியாவைச் சேர்ந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விபத்து, சென்ற ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் நடந்தது.

வாகனத்தில் ஈஸ்வரன் பாலகிருஷ்ணன் என்ற ஆடவர் தமது காதலியுடன் பயணம் சென்றுகொண்ருந்தார்.

வாகனத்தைக் காதலி செலுத்திக்கொண்டிருந்தார்.

ஆனால், காதலியுடன் உருவான வாக்குவாதம் காரணமாக ஈஸ்வரன், சிவப்பு விளக்கு சமிக்ஞையின்போது வாகனத்திலிருந்து வெளியேற முயன்றார்.

அப்போது போக்குவரத்தை கவனிக்காமல் கவனமின்றிக் கதவைத் திறந்த அவர், மோட்டார்சைக்கிள் ஓட்டுநரை இடித்தார்.

ஓட்டுநருடன் மோட்டார்சைக்கிளும் சாலையில் சரிந்து விழுந்ததில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

ஆறு தடங்கள் கொண்ட பெரிய சாலையான அங் மோ கியோ அவென்யூ 3ல் விபத்து நடந்தது.

ஆபத்தான முறையில் நடந்துகொண்டதற்காக ஈஸ்வரனுக்கு ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்க முடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்