Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீவு விரைவுச்சாலை விபத்தில் கார் ஓட்டுநர் காயம்

தீவு விரைவுச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியதில் கார் ஓட்டுநரான 44 வயதுப் பெண் காயமடைந்தார். இன்று (மார்ச் 13) அதிகாலை அந்தச் சம்பவம் நடந்தது.

வாசிப்புநேரம் -
தீவு விரைவுச்சாலை விபத்தில் கார் ஓட்டுநர் காயம்

படம்: Channel NewsAsia

தீவு விரைவுச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியதில் கார் ஓட்டுநரான 44 வயதுப் பெண் காயமடைந்தார். இன்று (மார்ச் 13) அதிகாலை அந்தச் சம்பவம் நடந்தது.

சம்பவம் குறித்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையின் வலது தடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் ஒன்றின் மீது கார் மோதியது.

யூனோஸ் ரோடு வெளிவாயிலுக்குப் பிறகு விபத்து நடந்தது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் அதிகாலை சுமார் 1.20 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகத் தெரிவித்தனர். 

காயமடைந்த பெண் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்