Images
  • accident

கார் மோதும் முன் தம்மைக் காப்பற்றிய பணிப்பெண் எங்கு சென்றார்? - கேட்கும் 2 வயது குழந்தை

கார் மோதும் முன் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பற்றி, பின்னர் மாண்ட பணிப்பெண், குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்தான் என்று கூறுகிறார் அவரின் முதலாளி.

இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பிரீட் கோர் (Jaspreet Kaur) என்ற 29 வயது பெண், புல்லியன் பார்க் (Bullion Park) என்ற கூட்டுரிமை வீட்டில் 3 மாதங்களாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அன்று, கோர் முதலாளியின் இரண்டு வயது மகனை தள்ளுவண்டியில் அழைத்துக் கொண்டு லெண்ட்டோர் அவென்யூவில் சாலையைக் கடந்தார்.

அப்போது, அவர்களை நோக்கி கார் வருவதை உணர்ந்த கோர், குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஆனால், கார் மோதியதில், கோர் மாண்டார்.

குழந்தை சிறு காயங்களோடு தப்பித்தது.

விபத்து நடந்த நாளிலிருந்து நான் தூங்கவேவில்லை. வீட்டில் எங்கு சென்றாலும், கோரின் ஞாபகம் வருகிறது.

கோர் எங்கு சென்றார் என்று என் மகன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். நான் என்ன பதில் சொல்வது?

என்றார் கோரின் முதலாளி.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த கோருக்கு 7 வயது மகள் உண்டு.

முதலாளியின் அண்டை வீட்டுக்காரர்கள் கோரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை வழங்கியுள்ளனர்.

நன்கொடைகளைக் கொண்டு, கோரின் மகளுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவது முதலாளியின் எண்ணம்.

கோரின் செயலுக்கும் என் மகனின் உயிரைக் காப்பாற்றியதற்கும் நன்றி கூறுவதற்கு வார்த்தைகள் போதாது

என்றார் கோரின் முதலாளி.


கோரின் உடல் நேற்று இரவு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. 

Top