Images
  • Carbon tax (1)
    (படம்: AFP)

வெளியேற்றப்படும் கரியமில வாயுவைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகளை ஆராயும் சிங்கப்பூர்

உள்நாட்டில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவை இங்கேயே பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகளை சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து பருவநிலை மாற்றப் பிரச்சினையை எதிர்ப்பது அதன் நோக்கம்.

Carbon Capture எனப்படும் தொழில்நுட்பப் பயன்பாட்டின் தொடர்பில் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதைப் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த பத்தாண்டுகளாவது ஆகும்.

செலவும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுவை பானங்கள், கான்கிரீட் தரை போன்றவை அடுத்த பத்தாண்டுகளில் மீட்கப்பட்ட கரியமில வாயுவைக் கொண்டு செய்யப்படலாம்.

வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் Carbon Capture தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் பயன்படுத்தினால் அது சாத்தியமாகும்.

எரிசக்தி ஆலைகளிலிருந்து வெளியேறும் வாயு பிடித்துவைக்கப்படும்.

அதிலிருந்து கரியமில வாயு பிரித்தெடுக்கப்படும்.

அதன்பிறகு, மீட்கப்பட்ட கரியமில வாயுவைப் பாதுகாப்பாக ஆழமான சுரங்கத்திற்கு மாற்றி அங்கு சேமித்து வைக்கலாம்.

அல்லது அதை மறுபயனீடு செய்து பயன்மிக்க பொருள்களைத் தயாரிக்கலாம்.

அது சிங்கப்பூருக்குப் பொருத்தமான தீர்வாக அமையும் என்கின்றனர் நிபுணர்கள். 

Top