Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அட்டைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்தவாறு தேர்வு எழுதிய மாணவர்கள்- மன்னிப்புக் கேட்கும் கல்லூரி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புகுமுகக் கல்லூரி ஒன்று மாணவர்களை அட்டைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்தவாறு தேர்வை நடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புகுமுகக் கல்லூரி ஒன்று மாணவர்களை அட்டைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்தவாறு தேர்வை நடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்கள் அட்டைப் பெட்டிகளைத் தலையில் அணிந்தவாறு தேர்வு எழுதும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அட்டைப் பெட்டியின் ஒருபகுதியை மட்டும் வெட்டி அதன் வழியே விடைத்தாளைப் பார்த்தவாறு தேர்வு எழுதினர் மாணவர்கள்.

ஒருவர் மற்றொருவரின் தேர்வு பதில்களைப் பார்க்காமல் இருக்க, கல்லூரி மேற்கொண்ட புத்தாக்க முயற்சி அது.

மாணவர்கள் அனைவரும் சொந்தமாகவே அட்டைப் பெட்டிகளைக் கொண்டுவந்தனர்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அட்டைப் பெட்டிகளை அணியவைக்கவில்லை என்று கல்லூரி விளக்கியது.

மாணவர்கள் சிலர் சற்று நேரம் கழித்து அட்டைப் பெட்டிகளை அகற்றியதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

மாணவர்கள் பயிலும் புகுமுகக் கல்லூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட்டாரக் கல்வி வாரியம் குறிப்பிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்