Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமிப்பரவலைக் கடந்துசெல்ல சுகாதாரத்தைத் தாண்டி வேறு எவ்வாறு பங்களிக்கலாம்?

COVID-19 கிருமித்தொற்று பரவி வரும் வேளையில், எப்படி தம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமித்தொற்று பரவி வரும் வேளையில், எப்படி தம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், தனி நபர்கள் மட்டும் கிருமிப்பரவலை எதிர்த்துப் போராடவில்லை.
ஒரு சமூகமே அதற்காகப் போராடுகிறது என்பதை நினைவில் கொள்வது சிறப்பு.

சிங்கப்பூர் கிருமித்தொற்றைத் தாண்டிச் செல்வதற்கு, சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தாண்டி, நாம் வேறு எந்தெந்த வழிகளில் பங்களிக்கலாம்?


நமது குடும்பம், நண்பர்கள் ஆகியோர் கிருமித்தொற்றை எதிர்த்து பாதுகாத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதிசெய்வது

- பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை அவர்களிடம் பகிரலாம். சிங்கப்பூரில் என்ன நிலவரம் என்பதை அவ்வப்போது தெரிந்துகொண்டு, அதைப் பகிரலாம். குறிப்பாக, முதியோருக்கு.


உண்மையான தகவல் என்பதை உறுதிசெய்யமால் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

- உறுதிசெய்யப்படாத தகவல் பொய்யான தகவலாகக் கூட இருக்கலாம். அதை மற்றவர்களுடன் பகிர்வது தேவையில்லாத பீதியை உருவாக்கலாம்.

-தகவலைப் பகிர்ந்துகொள்ளும்போது அது, நம்பகமானதா என்பதை உறுதிசெய்யலாம்.


முதல்அணி ஊழியர்களுக்கு நன்றி செலுத்துவது

கிருமிப்பரவலுக்கு எதிரான போரில், ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட பிரிவினருடன் பழகக்கூடிய முதல்அணி ஊழியர்கள் அதிக ஆபத்தைச் சந்திக்கின்றனர்.

இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல்,கடமையைச் செய்யும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.

தொடர்ந்து தளராமல் கடமையாற்ற, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்