Images
  • ttsh

வேதனை தணிக்கும் பராமரிப்பு (Palliative care) என்றால் என்ன?

மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்குப் பராமரிப்பை வழங்கும் சேவை Palliative care, அதாவது, வேதனை தணிக்கும் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

எல்லா நோயாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வேதனை தணிக்கும் பராமரிப்பு சிங்கப்பூரில் பல இடங்களில் அளிக்கப்படுகிறது.

டான் டொக் செங் மருத்துவமனையின் வேதனை தணிக்கும் பராமரிப்பு மருத்துவர்கள், கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவர் இந்தியா சென்று பிள்ளைகளைக் காண ஏற்பாடு செய்தது குறித்த செய்தி அண்மையில் வெளியானது. 


கவனிப்பின் முக்கிய நோக்கம்... விளக்கியது டான் டொக் செங் மருத்துவமனை

பராமரிப்பின் மூலம் குறுகிய ஆயுட்காலம் உடையவர்களின் ஆயுளை நீட்டித்து, அவர்கள் வாழும் நாள்களை அர்த்தமுள்ளதாக்குவது.

நோயாளிகளின் உடல் நலத்தை மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கையின் உளவியல், சமூக அம்சங்களைக் கையாள்வதும் பராமரிப்பில் அடங்கும்.

அவர்களில் பெரும்பாலானோர் நாள்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். உடல் உபாதையால் பெரிதும் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள்.

உறுப்பு செயலிழந்த நோயாளிகளையும், குழு கவனிக்கும். இதுபோன்ற பிரச்சினைகள் உடைய நோயாளிகள், அதிகபட்சம் ஓராண்டுவரை உயிர் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மரணத்துடனும் நோயுடனும் போராடும் ஒருவருக்கு வெற்றி, ஆடம்பர வாழ்க்கை, பொருள்கள் மீதான ஆர்வம் குறையும்.

வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதைப் பற்றியும் அடுத்து, வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பதைப் பற்றியும் மட்டுமே சிந்திக்க முடியும்.

அவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்து, அவர்கள் உலகை விட்டுப் பிரியும்போது, முடிந்தவரை குறைகளின்றிச் செல்ல வழியமைத்துக் கொடுக்கிறது இந்த உன்னதச் சேவை.

மேல் விவரங்களுக்கு https://singaporehospice.org.sg/services/ இணையத்தளத்தை நாடலாம். 

Top