Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை கிடைக்காவிட்டால் மனம் தளர்வது இயல்பு; ஆனால் நம்பிக்கையைக் கைவிடக்கூடாது: பணியிடை மாற்ற ஆலோசகர்

பொருத்தமான வேலை கிடைக்காவிட்டால் மனம் தளர்வது இயல்பு. ஆனால் நம்பிக்கையைக் கைவிடக்கூடாது என்று கூறுகிறார் பணியிடை மாற்ற ஆலோசகர் விமலா ராமசாமி.

வாசிப்புநேரம் -

பொருத்தமான வேலை கிடைக்காவிட்டால் மனம் தளர்வது இயல்பு. ஆனால் நம்பிக்கையைக் கைவிடக்கூடாது என்று கூறுகிறார் பணியிடை மாற்ற ஆலோசகர் விமலா ராமசாமி.

இத்தகைய சூழலில் வேலை தேடும் முயற்சிகள் உடனடியாகப் பலன் தராவிட்டாலும், அனைத்து வாய்ப்புகளையும் பெற அவர்கள் நீக்குப்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

தற்போதைய சூழலில், வேலை தேடுபவர்கள் எந்தெந்த வகையில் பணியிடை மாற்ற ஆலோசனைகளுக்குத் தம்மை நாடுகின்றனர் என்பதை 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பின் பணியிடை மாற்ற ஆலோசகர் விமலா.

நோய்ப்பரவல் காலத்தில் வேலைதேடுவோருக்கு என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?

  • தங்களிடம் உள்ள திறன்கள் என்னென்ன என்பதைக் கணித்து, அவற்றில் எவையெவை மற்ற தொழில்களுக்குப் பொருத்தமானவை அல்லது எப்படி அவை மற்ற வேலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட முடியும் என்பதைத் தாங்களே சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

வேலை தேடும்போது அத்தகைய திறன்களைப் பயன்படுத்திப் புதிய பணியில் தங்களால் திறமையாக ஈடுபட முடியும் என்பதை அவர்கள் முதலாளிகளுக்குத் தெரியப்படுத்தலாம்.

  •  பலவிதமான வாய்ப்புகளைப் பெற, திறந்த மனப்போக்கைப் பின்பற்றி நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளத் தயாராக இருக்கவேண்டும். நோய்ப்பரவல், பல்வேறு துறைகளைப் பாதித்துள்ளபோதும் மற்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளை அவர்கள் தேடிச் செல்லலாம்.

புதிய துறைகள், பதவிகள் அல்லது குறுகிய கால வேலைகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

  • பலர், நெருக்கடியான இந்தக் காலத்தில் எப்படிவேலை தேடுவது என்று தெரியாமல் இருக்கலாம். சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு, பணியிடை மாற்ற ஆலோசனைச் சேவைகளையும், SGUnited வேலைகள், திறன் நிலையத்தையும் அவர்கள் நாடலாம்.

பணியிடை மாற்ற ஆலோசகர்கள், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தடுத்த நடவடிக்கைகளைப்பற்றி விளக்குவர்.

வேலை தேடும்போது எத்தகைய தவறுகளைத் தவிர்க்கலாம்?

  • ஏனோதானோ என்று சிலர் அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்வர். ஆனால், வேலைதேடுவோர் குறிப்பாக தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப என்னென்ன திறன்களைப் புதிய வேலைக்குக் கொண்டுவர முடியும் என்றுதான் முதலாளிகள் பார்ப்பார்கள்.

அதனால், வேலை தேடுபவர்களின் Resume எனப்படும் சுயவிவரக் குறிப்பு, ஒவ்வொரு வேலைக்கும் ஏற்றவகையில் மாற்றி எழுதப்படவேண்டும்.

  •  சிலர் தங்களிடம் உள்ள குறைகளை முட்டுக்கட்டைகளாகப் பார்க்காமல், அவற்றை எப்படித் தங்களுக்குச் சாதமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பார்க்கவேண்டும். அதற்குத் தீர்வாக அவர்கள் பயிலரங்குகளுக்குச் செல்லலாம். சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு அத்தகைய பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது.

நோய்ப்பரவல் காலத்திலும் எவ்வாறு வேலை தேடலாம்?

MyCareersFuture.sg/CareersConnect பக்கத்தில் பணியிடை மாற்ற ஆலோசகர்களால் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தகவல்கள், குறிப்புகளை வேலைதேடுவோர் பெற்றுக்கொள்ளலாம்.

இடையில் பணி மாறுவோர், வேலை தேடும் முயற்சியில் பலன் கிட்டாதவர்கள், மீண்டும் வேலைக்குத் திரும்புவோர், எவ்வாறு வேலை தேடுவது என்று தெரியாதோருக்காக பலதரப்பட்ட தகவல்கள் உள்ளன.

http://go.gov.sg/wsg-ear வழியாகப் பணியிடை மாற்ற ஆலோசனைக்கு விண்ணப்பிப்போருக்கு, இணையக் காணொளி வழியாக நேரடிப் பணியிடை மாற்ற ஆலோசனை வழங்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்