Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வடகிழக்கு வட்டார வாசிகளுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்

வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்காக ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்காக ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

மன்றம் இரண்டாவது முறையாக நடத்திய வேலைச் சந்தையில் அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வேலை தேடுவதில் உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமல்லாமல் சமூக ஆதரவு நாடுவோருக்கும் சந்தை ஒரு தளமாக அமைந்தது.

தெம்பனீஸ் வட்டாரத்தில் நடைபெற்றது வேலைச்சந்தை.

அங்கு வேலை தேடிச் சென்றவர்கள் உடனடியாகத் திறன் ஆலோசகர்கள், முதலாளிகள் ஆகியோருடன் இணைக்கப்பட்டனர்.

அவர்களுக்காக மெய்நிகர் நேர்காணல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு வழங்கப்பட்ட 5 வேலை வாய்ப்புகளில் ஒன்று நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகிய பொறுப்புகளுக்கானது.

வேலையைப் பொறுத்து, மாதச்சம்பளம் 1,300 வெள்ளியிலிருந்து 8,000 வெள்ளிவரை இருக்கும்.

வேலை வாய்ப்புகளைத் தவிர்த்து நிதியுதவியையும் சமூக ஆதரவுத் திட்டங்களையும் வழங்கும் அமைப்புகளும் சந்தையில் இடம்பெற்றிருந்தன.

வேலை வாய்ப்புக்குக் காத்திருக்கும் காலக்கட்டத்தில் அவர்களுக்குத் தேவையான உதவியை அந்த அமைப்புகள் ஏற்பாடு செய்துதரும்.

கிருமிப்பரவல் சூழலில் அறிவிக்கப்பட்ட COVID ஆதரவு மானியத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி உள்ளதா என்பதைத் கண்டறியவும் இந்த வேலைச்சந்தை உதவியது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 1,700-க்கும் அதிகமான வடகிழக்கு வட்டாரவாசிகள் வேலை இணைப்புகள், திறன் மேம்பாடு உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர்.

அந்த எண்ணிக்கையை 4,000-க்கு உயர்த்த சமூக மேம்பாட்டு மன்றம் திட்டமிடுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்