Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிமைப்படுத்தப்படும் காலத்தில் பராமரிப்பாளரை நாடுபவர்கள் கோரிக்கை விடுக்கலாம்: சுகாதார அமைச்சு

தனிமைப்படுத்தப்படும் காலத்தில் பராமரிப்பாளரின் கவனிப்புத் தேவைப்படுவோர் அதற்காகக் கோரிக்கை விடுக்கலாம்.

வாசிப்புநேரம் -

தனிமைப்படுத்தப்படும் காலத்தில் பராமரிப்பாளரின் கவனிப்புத் தேவைப்படுவோர் அதற்காகக் கோரிக்கை விடுக்கலாம்.

சூழலை கருத்தில்கொண்டு அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூத்தோர், பிள்ளைகள், நோயால் பாதிக்கப்படுவோர், தங்களைப் பார்த்துக்கொள்ள இயலாதவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்படவேண்டியிருந்தால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

பராமரிப்பாளரைக் கோரும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பராமரிப்பாளர்கள் சில நிபந்தனைகளைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

அவர்கள்,

  • தனிமைப்படுத்தும் காலத்தில் எந்நேரமும் தொடர்பு கொள்ளப்படலாம்.
  • தனிமைப்படுத்துப்படுபவருடைய நலனையும் தம்முடைய நலனையும் கண்காணிக்கவேண்டும்.
  • கிருமித்தொற்று அறிகுறி இருந்தால் உடனே தெரிவிக்கவேண்டும்
  • சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி நிலவரப்படி, பராமரிப்பாளரைக் கோரும் 23 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சு CNA-இடம் சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்