Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

CareShield Life காப்புறுதித் திட்டத்துக்கு மேலும் அதிகமானோர் தகுதி பெறலாம்

CareShield Life எனும் உடற்குறையுள்ளோருக்கு நீண்டகாலப் பராமரிப்பு வழங்குவதற்கான தேசியக் காப்புறுதித் திட்டம் விரைவில் விரிவாக்கம் காணவுள்ளது.

வாசிப்புநேரம் -

CareShield Life எனும் உடற்குறையுள்ளோருக்கு நீண்டகாலப் பராமரிப்பு வழங்குவதற்கான தேசியக் காப்புறுதித் திட்டம் விரைவில் விரிவாக்கம் காணவுள்ளது.

1979-ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் பிறந்த சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அதற்கு இனி தகுதி பெறுவர் என்று சுகாதார அமைச்சு கூறியது.

மாற்றம் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடப்புக்கு வரும்.

ElderShield எனும் மூத்தோர்க் காப்புறுதித் திட்டத்தில் தற்போதுள்ள 400 பேர் , டிசம்பர் மாதத்திலிருந்து CareShield Life திட்டத்தில் இயல்பாக இணைத்துக்கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

CareShield Life திட்டத்தில், ElderShield திட்டத்தைவிட கூடுதல் வழங்குதொகையை எதிர்பார்க்கமுடியும் என்று அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள், பதிந்துகொள்வோருக்கு 2,500 வெள்ளி வரை ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.

Merdeka தலைமுறையினர், முன்னோடித் தலைமுறையினர்
ஆகியோருக்குக் கூடுதலாக 1,500 வெள்ளி வரை சலுகைகள் வழங்கப்படலாம்.

கடந்த ஆண்டு அறிமுகமான CareShield Life திட்டத்துக்கு, தற்போது, 1980 ஆம் ஆண்டிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்கள் மட்டுமே தகுதி பெறுகின்றனர்.

- CNA/dv(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்