Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கார்ல்டன் ஹோட்டலில் வெடிப்புச் சத்தம்; சுற்று வட்டாரங்களில் மின்தடை

 பிராஸ் பாசா பகுதியில் உள்ள கார்ல்டன் ஹோட்டலிலிருந்து, இன்று பிற்பகல் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கார்ல்டன் ஹோட்டலில் வெடிப்புச் சத்தம்; சுற்று வட்டாரங்களில் மின்தடை

(படம்: Facebook/Jun Long)

சிங்கப்பூர்: பிராஸ் பாசா பகுதியில் உள்ள கார்ல்டன் ஹோட்டலிலிருந்து, இன்று பிற்பகல் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மின்சேவை தடைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஹோட்டலில் தீச்சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாகக் குறிப்பிட்டது.

Facebook பயனீட்டாளர் Ricardo Sentosa பதிவேற்றம் செய்த காணொளியில், கருகிய ஹோட்டல் கதவும் கட்டத்திலிருந்து வெளிவரும் புகையும் தெரிந்தது.

பிற்பகல் சுமார் 1.20க்கு முதலில் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், சற்று நேரத்திக்குப் பின் மீண்டும் வெடிப்புக் கேட்டதாவும் கூறினார் செந்தோசா.

ஹோட்டலின் சுற்றுவட்டாரமான பூகிஸ் பகுதியில் ரயில் நிலையங்களிலும் அலுவலகக் கட்டடங்களிலும் மின்சேவை தடைப்பட்டதாக இணையத்தில் சிலர் குறிப்பிட்டனர். தீச் சம்பவத்திற்கும் மின்சாரத் தடைக்கும் தொடர்புள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஹோட்டலிருந்து சுமார் 1,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தீ மூண்ட மின்சார அறையில் தீயணைக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.


மின் விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவருவதில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாய் குழுமம் தெரிவித்தது.

மின்தடை குறித்து விசாரணை நடைபெறுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்