Images
  • Carousell Ebay
    (படம்: CNA)

சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட நோட்டுகள் Carousell, eBayஇல் விற்பனை

சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட 20 வெள்ளி நோட்டுகள், இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக CNA தெரிவித்துள்ளது. Carousell, eBay உள்ளிட்ட இணைய விற்பனைத் தளங்களில், அந்தப் புதிய பணநோட்டுகள் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் 400 பேர் அந்த 20 வெள்ளி நோட்டுகளை விற்பனைக்கு விடுத்துள்ளனர். பெரும்பாலும் அவை 25 வெள்ளிக்கும் 30 வெள்ளிக்கும் விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளன. புனிதமாக எண்களாகக் கருதப்படும் வரிசை எண்களைக் கொண்ட சில பண நோட்டுகள், நூற்றுக்கணக்கான டாலருக்கு விலை குறிப்பிடப்பட்டுள்ளன.

நினைவுப் பொருளாக வெளியிடப்படும் பண நோட்டுகளைப் பெறும் தனிநபர்கள் இப்படி அவற்றை விற்பனைக்கு விடுவது குறித்து, CNA, சிங்கப்பூர் நாணய வாரியத்திடம் கேட்டது. அதற்கு பதிலளித்த வாரியம், நினைவுப் பண நோட்டுகளை விற்பனை செய்ய சட்ட ரீதியாகத் தடையில்லை என்றபோதும் அவ்வாறு செய்யவேண்டாமெனக் கேட்டுக் கொண்டது.

சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ஒருமுறை வெளியிடப்பட்டுள்ள இந்தப் பண நோட்டுகளைச் சேகரித்து வைக்க, சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.  

Top