Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Carousellஇல் $10,000க்கும் மேலாக மோசடி செய்த ஆடவருக்குச் சிறை

Carousellஇல் விலையுயர்ந்த பொருள்களின் போலியை விற்று, 18 பேரை ஏமாற்றிய ஆடவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Carousellஇல் $10,000க்கும் மேலாக மோசடி செய்த ஆடவருக்குச் சிறை

(படம்: TODAY/Ooi Boon Keon)


Carousellஇல் விலையுயர்ந்த பொருள்களின் போலியை விற்று, 18 பேரை ஏமாற்றிய ஆடவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஏமாற்றி விற்ற பொருள்களின் மொத்த மதிப்பு 10,000 வெள்ளிக்கும் மேல்.

Adidas, Nike உட்பட்ட விலையுயர்ந்த பொருள்களை விற்பதாக 28 வயது ஜெரிக் லீ ஜியா சன் (Jeric Lee Jia Zhen) தனது Carousell பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

2016 ஜூலையில் முதல் நபர் ஏமாற்றப்பட்டார்.

அவரிடம் 4 போலி Adidas காலணிகளை விற்றார் லீ.

2,350 வெள்ளி கொடுத்து வாங்கிய காலணிகள் போலி என்பதை உணர்ந்ததும் அது பற்றி பாதிக்கப்பட்டவர் லீயிடம் கேட்டார்.

காலணிகள் போலி என்பது தனக்குத் தெரியாது என்று பொய் சொல்லி பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் சாக்குச் சொல்லிவந்திருக்கிறார் லீ.

இச்சம்பவத்திற்குப் பின்னும் லீ தொடர்ந்து ஓரண்டுக்கும் மேல் மற்றவர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதன்வழி அவர் 10,780 வெள்ளி மோசடி செய்தார்.

2016 ஜூலை மாதத்திற்கும் 2018 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் லீ மீதான பல்வேறு புகார்களைக் காவல்துறை பெற்றது.

சாதாரண நிலைத் தேர்வுகளை எழுதுவதற்காக லீ 20,000 வெள்ளிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லீ மீதான ஒவ்வொரு மோசடி குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்