Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருள்களின் விலையைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் புதிய செயலி

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களின் விலையைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் வகையில் செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பொருள்களின் விலையைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் புதிய செயலி

(படம்: Aqil Haziq Mahmud/ CNA)

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களின் விலையைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் வகையில் செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது.

CASE எனப்படும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் இன்று அதனை அறிமுகப்படுத்தியது.

Price Kaki செயலி மூலம், மளிகைப் பொருள்களின் சில்லறை விற்பனை விலை, சலுகைகள் போன்றவற்றை ஒப்புநோக்கலாம்.

வீட்டு உபயோகப் பொருள்கள், சில உணவங்காடி நிலையங்களில் விற்பனையாகும் உணவுப்பொருள்கள் போன்றவற்றுக்கும் அது பொருந்தும்.

பயனீட்டாளர்கள் விலை மாற்றங்களைக் கண்டறிந்து, அதுபற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் ரொக்கப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவும் அந்தச் செயலி உதவும்.

இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து இடம்பெறும் முன்னோட்ட அடிப்படையில் App Store, Google Play ஆகியவற்றின் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சிங்கப்பூர் முழுவதும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் Price Kaki செயலி அறிமுகம்காணும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்