Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி பின்னர் மாண்ட நபரின் வழக்கு, முழுமையாக விசாரிக்கப்படும்"

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி, பின்னர் மரணமடைந்த 17 வயது சந்தேக நபர் தொடர்பான வழக்கு, முழுமையாக விசாரிக்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
"போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி பின்னர் மாண்ட நபரின் வழக்கு, முழுமையாக விசாரிக்கப்படும்"

கோப்புப் படம்: CNA

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி, பின்னர் மரணமடைந்த 17 வயது சந்தேக நபர் தொடர்பான வழக்கு, முழுமையாக விசாரிக்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றார் அவர்.

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, 17 வயது ஜஸ்டின் லீயைக் (Justin Lee) கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. ஜூன் மாதத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மாதம் 16ஆம் தேதி ஜஸ்டின் உயரத்திலிருந்து விழுந்து மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாகத் திரு.சண்முகம் சொன்னார்.

ஜஸ்டினின் தாயாரிடம் அவர் இம்மாதம் முதல் தேதி பேசினார்.

வழக்கு விசாரணை முடிவுற்றதும், அதன் தொடர்பான கண்டுபிடிப்புகள் அவருடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் சிரமமான காலக்கட்டத்தில், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, ஜஸ்டினின் தாயாருக்கு மனோவியல் ரீதியான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் திரு.சண்முகம் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்