Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்பாளர்கள் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையைக் கையாள்வதை ஊக்குவிக்க மக்கள் செயல் கட்சியின் புதிய திட்டம்

மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கும் தொகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையைக் கையாள ஊக்குவிக்கப்படுவர்.

வாசிப்புநேரம் -
குடியிருப்பாளர்கள் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையைக் கையாள்வதை ஊக்குவிக்க மக்கள் செயல் கட்சியின் புதிய திட்டம்

படம்: Vanessa Lim

மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கும் தொகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையைக் கையாள ஊக்குவிக்கப்படுவர்.

அதைச் சாத்தியமாகும் வகையில் மறுபயனீட்டு முறையைப் பின்வற்றுவோருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படவுள்ளது. அதற்காக அவரவர் தொகுதியில் மறுபயனீட்டு இயந்திரங்கள் அமைக்கப்படும்.

இது Action for Green Towns திட்டத்தின் ஒரு பகுதி என்று மக்கள் செயல் கட்சி கூறியது.

இம்மாத இறுதிக்குள் 15 தொகுதிகளில் குறைந்தது 78 மறுபயனீட்டு இயந்திரங்களை அமைக்கும் இலக்கைக் கொண்டிருப்பதாக அது தெரிவித்தது.

இந்தத் திட்டம் SGRecycle அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

தங்கள் கழிவுகளை மறுபயனீட்டு இயந்திரத்திற்குள் போடும் முன்னர் குடியிருப்பாளர்கள் அதிலுள்ள QR குறியீட்டைக் கொண்டு பதிவு செய்யவேண்டும்.

ஒரு கிலோகிராம் காகிதம் அல்லது தடித்த அட்டைகளுக்கு 6 காசு வழங்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்