Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்

உணவுப் பொருள்களை ஒழுங்கான முறையில் வைத்துக்கொள்ளாததாலும் உணவு தயாரிக்கப்படும் இடத்தைச் சரிவரப் பராமரிக்காததாலும் AG (Global) Events Catering நிறுவனத்திற்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்

(படம்: SFA)

உணவுப் பொருள்களை ஒழுங்கான முறையில் வைத்துக்கொள்ளாததாலும் உணவு தயாரிக்கப்படும் இடத்தைச் சரிவரப் பராமரிக்காததாலும் AG (Global) Events Catering நிறுவனத்திற்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19-ஆம் தேதி அந்த நிறுவனத்தில் சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனை நடத்தியது.

சமைக்கப்படாத பொருள்கள் தரையில் இருந்ததோடு அசுத்தமான கூரைக்குக்கீழ் மூடிவைக்கப்படாத நிலையில் சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் இருந்ததும் அப்போது தெரியவந்தது.

உணவு தயாரிக்கப்படும் இடத்தில் கரப்பான்பூச்சிகளும் ஈக்களும் இருந்தன.

தரையிலும் சுவரிலும் விரிசல்கள் காணப்பட்டதால், நீர் கசிந்ததாக உணவு அமைப்பு குறிப்பிட்டது.

இந்தக் குறைபாடுகளின் காரணமாக, AG (Global) Events Catering நிறுவனத்தின் உரிமம் 27 நாள்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்