Images
  • 3 (9)
    படம்: Annamia Zazali Mazlan

குடியிருப்பு வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட 70 பூனைகள்

பிடோக் சௌத்தில் (Bedok South) உள்ள குடியிருப்பு வீட்டிலிருந்து சுமார் 70 பூனைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன், அந்த மூன்று அறை கொண்ட வீட்டில் 90 பூனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB), ஜூன் 30க்குள் அனைத்துப் பூனைகளையும் இடம் மாற்றும்படி கூறியுள்ளது.

அந்த வீட்டில் சுமார் 90 பூனைகள் இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. சில பூனைகள், சரியான காற்றோட்டம் இல்லாத அறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டில் ஐவர் தங்கியுள்ளதாக Berita Mediacorp தெரிவித்தது. மேலும் அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வீட்டிலிருந்து வரும் துர்நாற்றம் குறித்துப் புகார் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

இந்தப் பூனைகளின் அவல நிலை சில விலங்குப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்களில் ஒருவர் செல்வி வாதி சமட் (Wati Samad). இவர் தனி ஒருவராக 20 பூனைகளைக் காப்பாற்றியுள்ளார்.


பூனைகளைப் பாதுகாக்கும் சமூக அமைப்புகள், பொதுமக்களிடம் பூனைகளை தத்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டன. அதன் விளைவாக 30 பூனைகள் மீட்கப்பட்டன.

இதுவரை சுமார் 70 பூனைகள் காப்பாற்றப்பட்டு, புது உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல பூனைp பிரியர்கள் முன்வந்து, ஆதரவற்ற அந்தப் பூனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் சமூக ஊடகங்கள் வழி கோரியுள்ளனர். 

Top