Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மற்றோர் அதிரடித் திட்டம் வரும் சாத்தியத்தை நிராகரிக்கமுடியாது : சுகாதார அமைச்சர்

சிங்கப்பூரில் மற்றோர் அதிரடித் திட்டம் வரும் சாத்தியத்தை நிராகரிக்கமுடியாது : சுகாதார அமைச்சர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மற்றோர் அதிரடித் திட்டம் வரும் சாத்தியத்தை நிராகரிக்கமுடியாது : சுகாதார அமைச்சர்

(படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் மற்றோர் அதிரடித் திட்டம் அறிவிக்கப்படும் சாத்தியத்தை நிராகரிக்கமுடியாது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

எனினும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூலம் அத்தகைய நிலைமையைத் தவிர்க்க சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது.

அண்மையில் சமூக அளவில் COVID-19 நோய்ப்பரவல் சம்பவங்கள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு அமைச்சர் கான் அவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூரரகள் ஒத்துழைத்தால் அதிரடித் திட்டத்தை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

நாம் தொடர்ந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து நடவடிக்கைகளை அதற்கு ஏற்றாற்போல் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கான் கூறினார்.

புது விதிமுறைகள் வரும் 8ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகின்றன. அவை இம்மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.

புது விதிமுறைகள்படி சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 8லிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.

வேலையிடங்களுக்குச் சென்று பணிபுரிய அனுமதிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்