Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டாலும், மற்றவர்களுடனான நேரடித் தொடர்பைக் குறைத்துக்கொள்வது சிறந்தது-மருத்துவர்கள் பரிந்துரை

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டாலும், மற்றவர்களுடனான நேரடித் தொடர்பைக் குறைப்பதும், கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாசிப்புநேரம் -

கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டாலும், மற்றவர்களுடனான நேரடித் தொடர்பைக் குறைப்பதும், கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிரடித் திட்டம் அடுத்த மாதம் முதல் தேதி முடிவுறும்.

மக்கள் மெல்ல மெல்லத் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்குவர்.

இருப்பினும், COVID-19 கிருமித்தொற்று இன்னும் ஒழிக்கப்படாத நிலையில், மக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும் என்கிறார் மருத்துவரான திரு. ராகவேந்திரா.

மக்கள் எவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்?

அதுபற்றிய தகவல்களை அறிந்து வந்தது 'செய்தி'.

  • உறவினர், குடும்பத்தினர் வீடுகளுக்குச் செல்வதை, முடிந்த அளவு குறைத்துக்கொள்வது நல்லது.
  • பொது வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்
  • முடிந்தவரை, நேரடித் தொடர்பு அவசியமற்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.

வெளியே சென்றால்....

  • பொதுப் போக்குவரத்துச் சேவையை நெரிசலான உச்ச நேரத்தில் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.
  • பொது வசதிகளைப் பயன்படுத்தும்போது, கிருமிநாசினியைப் பயன்படுத்தவேண்டும்.
  • தானியக்க வங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் மின்படிகளின் கைப்பிடியைப் பிடித்தாலும் கைகளைப் பின்னர் சுத்தம் செய்யலாம்.
  • மற்றவர்களுடன் உணவைப் பகிரவேண்டாம்

மக்கள் வெளியே செல்லும்போது எவற்றை எடுத்துச் செல்வது அவசியம்?

  •  முகக் கவசம்
  • கிருமிநாசினி
  • கிருமிநீக்கும் ஆற்றல்கொண்ட ஈரத் தாள்கள்
  • தேவைப்பட்டால், கையுறைகள்

மற்றவர்களுடனான நேரடித் தொடர்பைத் தவிர்க்க, சிலர் சொந்தப் பேனாக்களையும், வீட்டிலிருந்து சொந்த உணவுப் பாத்திரங்களையும் கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு செய்வது அவசியமா?

எவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்று சொல்லத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது. ஆகவே, தற்போதைய சூழலில் முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருப்பதே சிறப்பு.

-என்றார் Speedoc மருந்தக மருத்துவர் ஃபாஹிர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்