Images
  • ccs
    (படம்:  AFP)

மலேசியாவுடனான கடல் எல்லை விவகாரத்துக்குப் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும் - சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான பேச்சுகளில் விரைவான, சுமுகமான தீர்வுகள் காணப்படாவிட்டால், உரிய அனைத்துலக மூன்றாம் தரப்பிடம் அந்த விவகாரத்தை எடுத்துச் செல்லச் சிங்கப்பூர் தயாராக இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

புவன விஸ்தா சமூக மன்றத்தில் இன்று காலை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதலில் பேசித் தீர்த்துக்கொள்ளவே சிங்கப்பூர் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் இளம் தலைவர்கள் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்தால், தேவையற்ற, ஆக்ககரமாய் இல்லாத நடவடிக்கைகளில் இரு தரப்பு ஆற்றல் வீணாவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.

Top