Images
  • rv
    படம்: Calvin Oh

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது : கல்வியமைச்சர் சான் சுன் சிங்

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் நடந்த தாக்குதலில் ஒரு மாணவர் மாண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, அதைத் தொடர்ந்து அமைச்சர் சான் அவ்வாறு கூறியுள்ளார்.

" இன்று காலை ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த துயரச் சம்பவம் பற்றிய செய்தியால் நாங்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடுமபத்தாரைப் பற்றியே எங்கள் சிந்தனை இருக்கிறது."

என்று அமைச்சர் சான் Facebook பதிவில் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பள்ளியின் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கல்வியமைச்சு இயன்ற எல்லா ஆதரவையும் வழங்கும் என்றும் அமைச்சர் சான் கூறினார்.

மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

சம்பவம் குறித்துக் காவல்துறையுடன் அமைச்சு அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் ஒரு மாணவர் மாண்டதாகவும் அது ஒரு தாக்குதல் சம்பவம் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அரசாங்க அமைப்புகள் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை.   

Top