Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வருங்காலத்தில் பயணத்துறைக்கும் அது சார்ந்த சேவைகளுக்கும் புத்தாக்கமான முயற்சிகள் தேவை: அமைச்சர் சான் சுன் சிங்

வருங்காலத்தில் பயணத்துறைக்கும் அது சார்ந்த சேவைகளுக்கும் புத்தாக்கமான முயற்சிகள் தேவை: அமைச்சர் சான் சுன் சிங்

வாசிப்புநேரம் -
வருங்காலத்தில் பயணத்துறைக்கும் அது சார்ந்த சேவைகளுக்கும் புத்தாக்கமான முயற்சிகள் தேவை: அமைச்சர் சான் சுன் சிங்

கோப்புப்படம்: Gaya Chandramohan

வருங்காலத்தில் பயணத்துறைக்கும், அது சார்ந்த சேவைகளுக்கும் புத்தாக்கமான முயற்சிகள் தேவை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பயணத்துறையும், சுற்றுலாத்துறையையும் கிருமிப்பரவல் நிலைகுத்திப் போகச் செய்திருக்கிறது என்பதை அவர் சுட்டினார்.

பெரிய அளவில் உள்நாட்டுச் சந்தைகள் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், புத்தாக்கமான முயற்சிகள் அவசியம் என்று திரு. சான் வலியுறுத்தினார்.

கிருமிப்பரவல் ஓயும் வரையோ, தடுப்பு மருந்து கிடைக்கும் வரையோ காத்திருக்க முடியாது என்று சொன்ன அவர், பயணத்துறையை மறுசீரமைக்கும் புத்தாக்கமான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்