Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் வேளையில் அதன்மூலம் ஏற்படக்கூடிய இடர்களைக் கையாளத் தயாராக இருக்கவேண்டும்: சான் சுன் சிங்

சிங்கப்பூர் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் வேளையில் அதன்மூலம் ஏற்படக்கூடிய இடர்களைக் கையாளத் தயாராக இருக்கவேண்டும்: அமைச்சர் சான் சுன் சிங்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் வேளையில் அதன்மூலம் ஏற்படக்கூடிய இடர்களைக் கையாளத் தயாராக இருக்கவேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

உலகிலிருந்து துண்டித்துக்கொள்வது சிங்கப்பூருக்கு நல்லதல்ல;

அதற்குப் பதில் இடர்களைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வதே ஆக்ககரமான அணுகுமுறை என்றார் திரு சான்.

சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கான பிரபல தெரிவாக சிங்கப்பூர் மீண்டும் பெயர்பெறவேண்டும்.

அதற்குச் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியம்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், Messe Berlin ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் சான் பேசினார்.

பயணத் திட்டங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னோடி நாடாக சிங்கப்பூர் விளங்கும்.

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான கட்டாய மருத்துவச் சோதனை, தொடர்புத் தடங்களைக் கண்டறியும் வழிமுறைகள் போன்றவை ஏற்கனவே நடப்பில் உள்ளதை அமைச்சர் சுட்டினார்.

மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்யும்போது, கூடுதலான பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும், பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு. சான் தெரிவித்தார்.

ஹோட்டல் அறைகளில் இருந்தவாறே காணொளி வழியாக சுற்றுலாக்களில் பங்கெடுப்பது போன்ற பயணநிரல்களுக்கும் திட்டமிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்