Images
  • economy
    (படம்: Reuters)

அரசாங்கம் பொருளியல் சூழலை அணுக்கமாகக் கண்காணிக்கும்: அமைச்சர் சான் சுன் சிங்

அரசாங்கம் பொருளியல் சூழலைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

ஒவ்வொரு பொளியல் சுழற்சியும் மாறுபட்டது என்று அவர் தமது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் ஆதரவளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திரு. சான் கூறியுள்ளார்.

வருங்காலச் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராயிருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

என்றாலும், அளவுக்கதிகமான அவநம்பிக்கை தேவையில்லை என்றார். தொடர்ச்சியான முதலீடுகள் சிங்கப்பூர் மீதான நீண்ட கால நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகத் திரு. சான் கூறினார்.

நீண்ட கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கம், பொருளியல் கொள்கைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று கூறிய அவர், அத்தகைய நடவடிக்கை, சிங்கப்பூர் தொடர்ந்து வலிமையான நாடாகத் திகழ உதவும் என்றார்.  

Top