Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பிள்ளைகளுக்கு வங்கிக் கணக்குகளைத் திறக்க உதவி

வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பிள்ளைகளுக்கு, CDA எனப்படும் சிறுவர் மேம்பாட்டு வங்கிக் கணக்கைத் தொடங்க பல அமைப்புகள் சார்ந்த பணிக்குழு உதவவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பிள்ளைகளுக்கு, CDA எனப்படும் சிறுவர் மேம்பாட்டு வங்கிக் கணக்கைத் தொடங்க பல அமைப்புகள் சார்ந்த பணிக்குழு உதவவிருக்கிறது.

Baby Bonus திட்டத்தின் ஓர் அங்கமாக, அந்தக் கணக்கு தொடங்கப்படும்.

கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மக்கள் கழகம், சிண்டா ஆகியவை அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

குடும்பங்களைச் சென்றடையும் பணிக்காக, அதிகாரிகளும், தொண்டூழியர்களுமாக சுமார் 400 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு இடையே சிண்டா அதுதொடர்பான முயற்சிகளைத் தொடங்கியது. அதிரடித் திட்டத்தின்போது ரத்துசெய்யப்பட்ட நடவடிக்கைகள் அது முடிந்ததும் உரிய பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளன.

இம்மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 150 குடும்பங்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு செப்டம்பருக்குள் அனைத்துக் குடும்பங்களும் வங்கிக் கணக்கைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மேம்பாட்டு வங்கிக் கணக்கு, 2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற குழந்தைகளுக்கு உரியது.

வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டவுடன் அரசாங்கம் 3,0000 வெள்ளியை அதில் செலுத்தும். அதன் பிறகு பெற்றோர் செலுத்தும் தொகைக்கு ஈடான தொகையை வெள்ளிக்கு-வெள்ளி என்ற அடிப்படையில் அரசாங்கம் செலுத்தும்.

பாலர் பள்ளிக் கட்டணம், Baby Bonus திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில மருத்துவ நிலையங்களுக்கான கட்டணம் போன்றவற்றிற்குக் குடும்பங்கள் அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்