Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சொத்து முகவர்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது

சிங்கப்பூரில் சொத்து முகவர்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சொத்து முகவர் மன்றம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சொத்து முகவர்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது

(படம்: அபிடா பேகம்)

சிங்கப்பூரில் சொத்து முகவர்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சொத்து முகவர் மன்றம் தெரிவித்துள்ளது.

வருடாந்தரப் புதுப்பிப்புக் கட்டமைப்பின் படி, சொத்து முகவர்கள் தங்கள் திறமையை மெருகேற்றிக் கொள்வது கட்டாயமாகிறது.

மின்னிலக்கத் தொழில்நுட்ப யுகத்தில் முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க அது உதவும்.

சொத்துப் பரிவர்த்தனைச் செயல்பாடுகள் தானியக்கமயமாகி வரும் சூழலில், சொத்து முகவர்களின் தேவை குறையக்கூடும்.

என்றாலும் வாடிக்கையாளர்கள் முகவர்கள் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் சொத்து முகவர் மன்றம் கருத்தாய்வு நடத்தியது.

அதில், 1,500-க்கும் அதிகமானோர் நேரடியாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

சென்ற ஆண்டு, 72 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் வருங்காலப் பரிவர்த்தனைக்காக சொத்து முகவர்களை நாட விரும்பினர்.

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அந்த விகிதம் 12 விழுக்காடு அதிகம்.

தங்கள் சொத்து முகவரின் சேவையில் திருப்தி அடைந்ததாக 85 விழுக்காட்டினர் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்