Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிறுவனங்கள் சம்பள விவரங்களை வெளியிடுவதில் அவ்வளவு வெளிப்படையாக இல்லை

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையிலான நிதியாண்டுக்கான விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நிறுவனங்கள் சம்பள விவரங்களை வெளியிடுவதில் அவ்வளவு வெளிப்படையாக இல்லை

(படம்:AFP/Rahman Roslan)

சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு  2016ஆம் ஆண்டு சாதகமாக இல்லாமலிருந்தாலும், சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

அண்மை ஆய்வில் அது தெரியவந்தது.

சுமார் 600 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையிலான நிதியாண்டுக்கான விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வருடாந்திரச் சம்பளம் அதிகபட்சமாக 13 மில்லியன் வெள்ளி.

அவர்களது சராசரி வருடாந்திரச் சம்பளம் ஒன்றரை மில்லியன் வெள்ளிக்கும் அதிகம்.

நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச வருடாந்திரச் சம்பளம் 8.4 மில்லியன் வெள்ளி.

சராசரி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளி என்று ஆய்வு குறிப்பிட்டது.

இருப்பினும், அந்த எண்ணிக்கை அனைத்து நிறுவனங்களின் சராசரி அளவைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறப்பட்டது.

மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே உண்மையான சம்பளத் தொகை குறித்த தகவல்களை வெளியிட்டதாக ஆய்வு கூறியது.

நிறுவன நிர்வாக விதிமுறைகளுக்கேற்ப அவை அமைந்திருக்கவில்லை.

உயர் அதிகாரிகளின் உண்மையான சம்பள விவரங்களை வெளியிடவேண்டும் என்று அந்த விதிமுறை வலியுறுத்துகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்