Images
  • gavel
    ( படம்: AFP )

பொய்ச் சான்றிதழ்களைக் கொடுத்த பயிற்சி நிலைய முதல்வருக்கு 10 மாதச் சிறை

பயிற்சி நிலையம் ஒன்றின் முதல்வர், பொய்ச் சான்றிதழ்களைக் கொடுத்த குற்றத்துக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு இன்று (நவம்பர் 8) இதனைத் தெரிவித்தது.

எவ்விதப் பயிற்சிகளும் மதிப்பீடுகளும் கொடுக்காமல், 17 கட்டுமானப் பாதுகாப்புச் சான்றிதழ்களை Vsafe பயிற்சி நிலையத்தின் முதல்வர் அடூல்ஜஃபார் அப்துல்குதோஸ் (Aduljafar Abdulkuthose) விற்றுள்ளார்.

அந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்காகத் தங்களது முகவர்களின் வாயிலாகக் கட்டுமான ஊழியர்கள் 200 வெள்ளியிலிருந்து 700 வெள்ளி வரை கட்டணம் செலுத்தியதாக அமைச்சு குறிப்பிட்டது.

திரு. அடூல்ஜஃபாரின் மோசடி குறித்து 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

Vsafe பயிற்சி நிலையத்திலிருந்து ஆக அதிகமானோர் சான்றிதழ்கள் பெறுகிறார்கள் எனும் ஐயம் எழுந்ததைத் தொடர்ந்து அந்த விசாரணை ஆரம்பமானது.

Building Construction Supervisor Safety (BCSS) எனும் கட்டுமானப் பாதுகாப்புச் சான்றிதழ், கட்டுமான மேற்பார்வையாளர் பொறுப்பை ஏற்பதற்கு அவசியம்.

பொய்யான பாதுகாப்புச் சான்றிதழ்களை விற்று, திரு. அடூல்ஜஃபார் ஊழியர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியதாக மனிதவள அமைச்சு கூறியது.







 

Top