Images
  • light ttree
    படம்: ஐஸ்வர்யா தேவி

சமூகத்துக்குப் பங்காற்றியோருக்காக மரினா பேயில் 'ஒளி மரங்கள்'

சிங்கப்பூர்ச் சமூகம் தொடர்ந்து வலுப்பெற உழைத்த அமைப்புகளையும் தனி நபர்களையும் கொண்டாடும் வகையில் மரினா பே வட்டாரத்தில் 30 கிறிஸ்துமஸ் மரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒளியூட்டப்பட்டுள்ளது.

ChariTrees 2018 எனும் அவற்றை எழுப்பும் நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தற்போது நடைபெறும் நிகழ்ச்சியில் அவருடன் 130க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளையர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


சிறார்களின் இசை அணிவகுப்பு, நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது.

லாப நோக்கமில்லாத அமைப்பாகிய The RICE Company Limited நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சி எட்டாம் ஆண்டாக நடைபெறுகிறது.  

Top