Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Chan Brothers பயண முகவர் நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிவு

Chan Brothers பயண முகவர் நிறுவனத்தின் இணையத் தளத்திலிருந்த பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, அதன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Chan Brothers பயண முகவர் நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிவு

(படம்: CNA)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

Chan Brothers பயண முகவர் நிறுவனத்தின் இணையத் தளத்திலிருந்த பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, அதன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிதித் தொழிநுட்பத் துறையில் பணிபுரியும் திரு. ஆண்ட்ரூ கோ அதனைப் பற்றி CNAவிடம் தெரிவித்தார்.

ஓர் ஆய்வுக்கான தகவல்களைச் சேகரிக்கும்போது திரு. கோ தவறுதலாக பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அதன் மூலம் பயணம் செய்வதற்கு Chan Brothers நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள், விசாரித்தவர்கள் ஆகியோரின் தகவல்களைப் பார்க்க முடிந்ததாக திரு. கோ கூறினார்.

500க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை, பயணத் திட்டம் உள்ளிட்ட தனிநபர் தகவல்களை அதன்வழி தாம் சேகரிக்க முடிந்ததாகத் திரு. கோ கூறினார்.

சம்பவத்தை உறுதிப்படுத்திய Chan Brothers நிறுவனம், குறைபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தது.

சம்பவம் குறித்து தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாகவும் நிறுவனம் கூறியது.

அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்