Images
  • chan
    (படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட கடப்பாடு கொண்ட தலைமைத்துவக் குழுக்கள் தேவை

சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட கடப்பாடு கொண்ட தலைமைத்துவக் குழுக்கள் தேவை என்று பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்களை ஒன்றுபடுத்தவும், அவர்கள் மனங்களில் நம்பிக்கையை வளர்க்கவும் அது அவசியம் என்றார் அவர்.

நேற்று முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்திர S R Nathan Hard Seats Lecture எனப்படும் தலைமைத்துவம் குறித்த உரையில் அவர் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

சிங்கப்பூர் Oxford-Cambridge சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூரின் வளமான எதிர்காலத்துக்குத் தேவைப்படும் முக்கியத் தலைமைத்துவப் பண்புகளை அமைச்சர் சான் எடுத்துரைத்தார்.

அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையில் ஆழமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே தலைவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்றார் அவர்.

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தலைவர்கள் 3 வழிகளில் முயற்சி செய்யலாம்.

முதலாவதாக, சவால்களையும்,வாய்ப்புகளையும், வெளிப்படையாகவும், தைரியமாகவும் சந்திக்க அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தோரிடம் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாறவும் தொடர்ந்து புதிய வழிகளை அடையாளம் காணத் தெரிந்திருக்கவேண்டும்.

மூன்றாவதாக, நம்பிக்கையான, பொறுப்பு-மிக்க நபர்களாகத் திகழவேண்டும் என்று திரு. சான் குறிப்பிட்டார்.

புதிய தலைமுறைத் தலைவர்கள் சவால்களை ஒன்றிணைந்து சமாளிக்க,நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கவேண்டும் என்றார் அவர்.
 

உங்கள் கருத்து

Top