Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் மரணச் சம்பவம் - அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடவுள்ள கல்வியமைச்சர்

கல்வியமைச்சர் சான் சுன் சிங், ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த மரணச் சம்பவம் குறித்து அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடவுள்ளார்.

வாசிப்புநேரம் -

கல்வியமைச்சர் சான் சுன் சிங், ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த மரணச் சம்பவம் குறித்து அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடவுள்ளார்.

அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை வெளியிடவிருப்பதாக அவர் Facebook-இல் பதிவிட்டார்.

உதவி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காணவும், பள்ளிகளுக்கு ஆதரவளிக்கவும், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் குறித்து, பெற்றோரிடமும் சமூகத்தினரிடமும் அக்கறை எழுந்துள்ளதாக அவர் சொன்னார்.

துயரத்துக்கு இடையிலும் நமது சிங்கப்பூர் உணர்வு சற்றும் குறையவில்லை என்று திரு. சான் குறிப்பிட்டார்.

"பள்ளியில் மலர்களையும் குறிப்புகளையும் விட்டுச்சென்ற பொதுமக்கள் முதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைச் சேவை வழங்கிய நிபுணர்கள் வரை, சமூகத்தினர் அனைவரும் ஒன்றுதிரண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின்போது மாணவர்களைப் பாதுகாக்க, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட துணிச்சலான செயல்களைத் திரு. சான் சுட்டினார்.

திங்கட்கிழமை அன்று, அந்தப் பள்ளியில் 13 வயது மாணவர் மாண்டார்.

அதில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து கோடரி ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்