Images
  • Chan Chun Sing
    (படம்: CNA) 

சில்லறை வர்த்தகங்களின் விலைகளை ஒப்பிட Crowdsourcing தளங்களைப் பயன்படுத்துவது பற்றி அரசாங்கம் பரிசீலனை

வாடிக்கையாளர்கள் சில்லறை வர்த்தகங்களின் விலைகளை ஒப்பிடுவதற்கு உதவ Crowdsourcing தளங்களைப் பயன்படுத்துவது பற்றிப் பரிசீலித்து வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

பெரும் எண்ணிக்கையில் மக்களைக் கொண்டு தகவல் திரட்டுவது Crowdsourcing எனப்படுகிறது.

வாடிக்கையாளர்களிடையே, விலைவாசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அது விரைவான, சிறப்பாகச் செயல்படக்கூடிய வழியாக இருக்கும் என்றார் அவர்.

அரசாங்கம், குறிப்பிட்ட பொருட்களின் விலையைக் கண்காணிக்க குழுக்கள் அமைப்பதைக் காட்டிலும் அது சிறந்த வழியாக இருக்கும் என்று திரு. சான் கூறினார்.

வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.


   

Top