Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க நாடு எனும் சிறப்பு ஊக்கமளிக்கிறது: வர்த்தக, தொழில் அமைச்சர்

உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க நாடு எனும் சிறப்பைப் பெற்றிருப்பது ஊக்கமளிக்கும் தகவல் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க நாடு எனும் சிறப்பு ஊக்கமளிக்கிறது: வர்த்தக, தொழில் அமைச்சர்

கோப்புப் படம்: Gaya Chandramohan


உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க நாடு எனும் சிறப்பைப் பெற்றிருப்பது ஊக்கமளிக்கும் தகவல் என்று
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூரின் வலுவான அடித்தளம் தொடர்ந்து அதனைப் போட்டியாளர்களிடமிருந்து தனித்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

பட்டியலில் சிங்கப்பூரின் தரநிலை உயர்ந்ததற்கான சில காரணங்களையும் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

வெளிப்படையான பொருளியல், முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான வலுவான உறவுகள், விரிவான ஊழியரணி, நிலையான அரசாங்கம், மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பதில் நடவடிக்கை எடுத்தல் போன்ற அம்சங்களை அவர் சுட்டினார்.

சிறிய, வெளிப்படையான பொருளியலைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் எதையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் திரு. சான்.

பொருளியல் நிச்சயமற்றதன்மை நிலவும் சூழலில், அனைவரும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால்தான் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்