Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்கப் பொருளியலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த கட்டம்-அமைச்சர் சான்

தகவல்கள் சுமுகமான முறையில் பரிமாறிக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக, சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறந்துவைத்திருப்பதாக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மின்னிலக்கப் பொருளியலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த கட்டம்-அமைச்சர் சான்

கோப்புப் படம்: Gaya Chandramohan

தகவல்கள் சுமுகமான முறையில் பரிமாறிக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக, சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறந்துவைத்திருப்பதாக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

அதற்காக, சிங்கப்பூர் அதன் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் சொன்னார்.

மின்னிலக்கப் பொருளியலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்றார் அவர்.

The Economist சஞ்சிகை ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் திரு சான் பேசினார்.

உலக அளவில் விநியோக இணைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கிடையே, சிங்கப்பூர் அதன் வெளிப்படைத் தன்மையால் ஒரு சிறந்த நிலையில் இருப்பதை அவர் சுட்டினார்.

எல்லா வர்த்தகங்களையும் வரவேற்கும் ஒரு தளமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

உலக வர்த்தக நிறுவனம்
விதிகள் சார்ந்த வர்த்தக அமைப்பை அமல்படுத்த விரும்புகிறது. அதை நிலைநிறுத்த சிங்கப்பூர் பணியாற்றி வருவதாகவும் திரு சான் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்