Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'மலேசிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், சிங்கப்பூருடனான விநியோகத் தொடர்பில் இடையூறுகள் ஏதுமில்லை': அமைச்சர் சான் சுன் சிங்

மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உள்ள விநியோகத் தொடர்பில் இடையூறுகள் ஏதுமில்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'மலேசிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், சிங்கப்பூருடனான விநியோகத் தொடர்பில் இடையூறுகள் ஏதுமில்லை': அமைச்சர் சான் சுன் சிங்

படம்: Try Sutrisno Foo

மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உள்ள விநியோகத் தொடர்பில் இடையூறுகள் ஏதுமில்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும்
இணைந்து செயல்பட அவை கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு நாள்களாகப் பொருள்கள் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சுமுகமாக விநியோகம் செய்யப்படுவதைத் திரு. சான் சுட்டினார்.

கிருமிப்பரவலின்போது, விநியோகங்களுக்கும் அதன் தொடர்புகளுக்கும் சாத்தியமான இடையூறுகள் ஏற்படுவதை எதிர்நோக்குவதற்கு, சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

விநியோக முறைகளைப் பல்வகைப்படுத்தும் முயற்சிகளை வலுவாக்க, ஏனைய நாடுகளுடன் புதிய விநியோக முறைகளுக்கு சிங்கப்பூர் ஏற்பாடு செய்வதாகவும் திரு. சான் சிங்கப்பூரர்களுக்கு உறுதியளித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்