Images
  • chan (1)
    (படம்: Jason Quah / Today)

'சிங்கப்பூர் மலேசிய உறவு: பிணக்குகள் உண்டு; ஆனால் பொதுவான அம்சங்கள் பல'

ரயில், தண்ணீர் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதைத்தாண்டி, சிங்கப்பூர் மலேசியா இடையில் பொதுவான அம்சங்கள் எத்தனையோ உள்ளன என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

இருதரப்பு உறவை எந்த ஒரு பிணக்கும் பாதிக்காமல் இருப்பதை சிங்கப்பூர் உறுதிசெய்யும் என்றார் அவர்.

மலேசியா சிங்கப்பூர் உறவு ஒரு திட்டத்தைப் பொறுத்து இல்லை. எந்த ஒரு மலேசிய அரசாங்கத்துடனும் சிங்கப்பூர் இணைந்து பணியாற்றும். அது இருதரப்புக்கும் அனுகூலமானதாக இருப்பது உறுதி செய்யப்படும். இருதரப்பு மரியாதையும் கட்டிக்காக்கப்படும்.

என்றார் திரு சான்.

புதிய அரசாங்கத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி, உறவுகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

அமெரிக்க சீன வர்த்தகப் போரால் மாறிவரும் உலகப் பொருளியல் சூழல் குறித்தும் திரு சான் பேசினார்.

ஒவ்வொரு நெருக்கடியிலும் சவால்களும் இருக்கும், வாய்ப்புகளும் இருக்கும். சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் சவால்களும், வாய்ப்புகளும் எங்கிருக்கின்றன என்பதைக் கவனமாகப் பார்க்கவேண்டும்.

என்றார் அவர்.

தஞ்சோங் பகார்-தியோங் பாரு வட்டாரவாசிகளுடன் தேசிய தின கொண்டாட்ட விருந்தில் கலந்துகொண்டபோது திரு சான் பேசினார். நிகழ்ச்சியில் சுமார் 900 பேர் கலந்துகொண்டனர்.


 

Top