Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவை மாற்றங்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவைகளில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் நடப்புக்கு வரும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவை மாற்றங்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

படம்: Land Transport Guru website/boy_you_want_bus

புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவைகளில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் நடப்புக்கு வரும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த மாற்றங்கள் இம்மாதம் 30ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.

வரும் ஞாயிறன்று நடப்பிற்கு வரவேண்டிய மாற்றங்கள் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மாற்றங்கள் குறித்த பயணிகளின் அதிருப்தியைத் தணிக்கும் நடடிவக்கைகளைச் செயல்படுத்த பேருந்து நிறுவனங்களுக்குக் கூடுதல் அவசாசம் வழங்குவது நோக்கம் என்று போக்குவரத்துத் துறைக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்தார்.

நகரப் பகுதிக்கு நேரடிச் பேருந்துச் சேவை வழங்குவதும் அதில் அடங்கும் என்றார் அவர்.

பேருந்துச் சேவைகள் 700, 700A ஆகியவை நிறுத்தப்படும் என இம்மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

மரினா சென்டர் பேருந்து முனையத்திற்குச் செல்வதற்கு பதிலாகப் பேருந்துச் சேவை 171 புக்கிட் பாஞ்சாங் ரயில் நிலையத்தைச் சுற்றிவந்து யீஷுனுக்குத் திரும்பும்.

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. லியாங் எங் ஹுவா, இந்தத் திடீர் மாற்றங்கள் குடியிருப்பாளர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துமெனக் கூறினார்.

குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை அவை எவ்வாறு பாதிக்கும் என்பது கருத்தில் கொள்ளப்படாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக Facebook பதிவில் அவர் குறிப்பிட்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்