Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு

சாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி காணப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 40 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன; ஓடுபாதை ஒன்றும் மூடப்பட்டது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு

(படம்: CAG)

சாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி காணப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 40 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன; ஓடுபாதை ஒன்றும் மூடப்பட்டது.

நேற்றும் (ஜூன் 18) இன்றும் ( ஜூன் 19) வானூர்தி விமான நிலையத்தின் அருகே காணப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

நேற்று இரவு சுமார் 11 மணிக்கும் இன்று காலை 9 மணிக்கும் ஓர் ஓடுபாதையின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. விமான நிலையத்தின் மற்ற ஓடுபாதைகள் வழக்கமாகச் செயல்பட்டன.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர்க் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் வானூர்தியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.

விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதில்லை என்று ஆணையம் தெரிவித்தது.

குற்றம் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதத்துடன், 12 மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்