Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுத்தப்படுத்தும் பணிகளை இரட்டிப்பாக்கியுள்ள சாங்கி விமான நிலையம், ஜூவல் கடைத்தொகுதி

சாங்கி விமான நிலையம் அதன் அனைத்து முனையங்களையும் ஜூவல் சாங்கி கடைத்தொகுதியையும் சுத்தப்படுத்தும் பணிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
சுத்தப்படுத்தும் பணிகளை இரட்டிப்பாக்கியுள்ள சாங்கி விமான நிலையம், ஜூவல் கடைத்தொகுதி

படம்: Gaya Chandramohan

சாங்கி விமான நிலையம் அதன் அனைத்து முனையங்களையும் ஜூவல் சாங்கி கடைத்தொகுதியையும் சுத்தப்படுத்தும் பணிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வீரியமிக்க கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கோவிட்-19 பரவலால் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்திருப்பதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே நம்பகத்தன்மையை அதிகரிப்பது அதன் நோக்கம்.

கிருமிக்கு எதிரான போராட்டத்தில் சாங்கி விமான நிலையத்தின் துப்புரவாளர்களின் பங்கு மிக அதிகம்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துபோகும் இடம்.

வருகையாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் துப்புரவாளர்கள் தங்கள் பணியை இரட்டிப்பாக்கி முழுமூச்சாகப் பணியாற்றி வருகின்றனர்.

பயணிகள், ஊழியர்கள் என அனைவரையும் பாதுகாப்பது மகிழ்ச்சியளிக்கும் வழக்கமான பணி; அது இப்போது அதிகரித்திருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் அதிகாரிகள் கூறினர்.

சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள் தங்கள் சொந்தச் சுகாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

முனையங்களிலும் ஜூவெல் கடைத்தொகுதியிலும் கையைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினித் திரவப் புட்டிகள் 160லிருந்து 1,200க்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்