Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொக்கெய்ன் கடத்திய ஆடவர் சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டார்

பிரேஸிலுக்கும் தாய்லந்துக்கும் இடையே பலமுறை கொக்கெய்ன் போதைப்பொருளைக் கடத்திய ஆடவர் இறுதியாக சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

வாசிப்புநேரம் -
கொக்கெய்ன் கடத்திய ஆடவர் சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டார்

(படம்: REUTERS/Edgar Su/Files)

பிரேஸிலுக்கும் தாய்லந்துக்கும் இடையே பலமுறை கொக்கெய்ன் போதைப்பொருளைக் கடத்திய ஆடவர் இறுதியாக சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 49 வயது மார்ஸ்லேண்ட் ஆண்டிரு ஜான் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்காக அவருக்கு 26 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டோனி என்பவர் சொன்னதைக் கேட்டு மார்ஸ்லேண்ட் போதைப்பொருளைக் கடத்தியிருக்கிறார்.

பிரேஸிலுக்கும் தாய்லந்துக்கும் இடையே நான்கு முறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.

இறுதியாக சிங்கப்பூர் வழியே தாய்லந்துக்குச் செல்லும்போது மார்ஸ்லேண்டின் கால்சட்டையில் மறைக்கப்பட்டிருந்த 150 கொக்கெய்ன் உருண்டைகளும் உடலின் மற்ற பகுதிகளில் 27 உருண்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

மார்ஸ்லெண்ட் மீது முதலில் மரணதண்டனைக்குரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அது பிறகு ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்