Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது

உலகில் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று சாங்கி விமான நிலையம். அதில் திரையரங்கு முதல், குளிக்க இடம் வரை பயணிகளுக்கு எத்தனையோ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் துணிகளைக் காயவைத்த மாது

(படம்: Facebook/All Singapore Stuff)

உலகில் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று சாங்கி விமான நிலையம். அதில் திரையரங்கு முதல், குளியலறை வரை பயணிகளுக்கு எத்தனையோ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் துணிகளைக் காயவைக்கும் வசதி இல்லையென்பதைப் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இல்லாத அந்த வசதியைத் தாமாகவே ஏற்படுத்திக்கொண்டார் அவர்.

விமான நிலையத்தின் வெளியில் ஆடைகளை உலர்த்தும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

All Singapore Stuff பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 14) காணொளியைப் பதிவேற்றம் செய்தார் மார்க் எனும் பயனீட்டாளர்.

சிலர் காணொளியைக் கேலிசெய்து பெண்ணின் செயல் கம்பத்து உணர்வை ஞாபகப்படுத்துவதாகக் கூறினர். சிலர் மாதின் போக்கைக் கண்டித்துள்ள வேளையில், வேறு சிலர் அவரின் சூழ்நிலை தெரியாமல் சர்ச்சையை ஏற்படுத்தவேண்டாம் என்று கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்