Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'9 மாதங்களாகக் காலியாக இருந்த சாங்கி கடைத்தொகுதியில் உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை'

'9 மாதங்களாகக் காலியாக இருந்த சாங்கி கடைத்தொகுதியில் உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை'

வாசிப்புநேரம் -
'9 மாதங்களாகக் காலியாக இருந்த சாங்கி கடைத்தொகுதியில் உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை'

(படம்: Aqil Haziq Mahmud)

9 மாதங்களாகக் காலியாக இருந்த சாங்கி கடைத்தொகுதியில் உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை என்று நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் போக்குவரத்து நெரிசல், கார் நிறுத்தும் பிரச்சினைகள் ஆகியவை பற்றிப் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்ட Liv@Changi கடைத்தொகுதி அதிரடித் திட்டத்தினாலும் நகரச் சீரமைப்பு ஆணையத்தின் கட்டுப்பாடுகளாலும் கடைக்காரர்களை ஈர்க்கச் சிரமப்பட்டு வருகிறது.

பிப்ரவரியில் கடைத்தொகுதியின் முதல், இரண்டாம் தளங்களில் உணவகங்களைத் திறக்க ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.

ஆனால் கடைத்தொகுதியில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், உடலுறுதி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்று 2015ஆம் ஆண்டே ஆணையம் சொத்து மேம்பாட்டாளரிடம் தெரிவித்திருந்தது.

இவ்வாண்டு அது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

கடைத்தொகுதியைச் சுற்றிப் போக்குவரத்து, கார் நிறுத்தும் பிரச்சினைகள் மோசமடையும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

கடைத்தொகுதி வெற்றிகரமாக இயங்க கட்டுப்பாடுகள் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாய் அதன் நிர்வாக நிறுவனமான Fortune Assets Changi தெரிவித்தது.

வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதே கடைத்தொகுதியின் நோக்கம் என்று அது சொன்னது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்