Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி பாயிண்ட் படகுத்துறை பதாகையில் தமிழ் எழுத்துப் பிழை

சாங்கி பாயிண்ட் படகுத்துறையின் திறக்கும் நேரத்தைக் குறிக்கும் பதாகையின் தமிழ் வாசகத்தில் எழுத்துப் பிழைகள் உள்ளன.

வாசிப்புநேரம் -
சாங்கி பாயிண்ட் படகுத்துறை பதாகையில் தமிழ் எழுத்துப் பிழை

(படம்: UEMS)

சாங்கி பாயிண்ட் படகுத்துறையின் திறக்கும் நேரத்தைக் குறிக்கும் பதாகையின் தமிழ் வாசகத்தில் எழுத்துப் பிழைகள் உள்ளன.

பிழை கொண்ட பதாகையின் படத்தை 'செய்தி' நேயர் விக்டர் வின்செண்ட் Facebook வாயிலாக அனுப்பிவைத்தார்.

"படகுத்துறை" என்று குறிப்பிடப்படவேண்டிய சொல் "படகுதுரை" என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதாகை சில ஆண்டுகாலமாக அங்கு இருப்பதாய் படகுத்துறையைப் பராமரிக்கும் UEMS நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

பிழை உள்ள பதாகை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'செய்தி' சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்திடம் வினவியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்