Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு 15 மில்லியன் வெள்ளி ஆதரவுத்திட்டம்

இரண்டே நிமிடங்களில் நோய்த்தொற்று இருக்கிறதா என்பது உறுதிசெய்யப்படும்.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலைய ஊழியர்களுக்கு 15 மில்லியன் வெள்ளி ஆதரவுத்திட்டம்

(படம்:Reuters/Edgar Su)

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரவு ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் அவற்றின் ஊழியர்களுக்கு உதவ 15 மில்லியன் வெள்ளியைச் செலவிடவிருக்கின்றன.

விமான நிலைய ஊழியர்களுக்குப் புதிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

ஊழியர்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள அந்த 15 மில்லியன் வெள்ளி உதவும்.

சுமார் 5,000 ஊழியர்கள் அதன் மூலம் பலனடையவுள்ளனர்.

6 மாதங்களுக்கான சிறப்புச் சம்பளத்தொகை, உணவு ஆகியவற்றுக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

அதிக அபாயமுள்ள பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், வேலை முடிந்தவுடன் சுவாசப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

இரண்டே நிமிடங்களில் நோய்த்தொற்று இருக்கிறதா என்பது உறுதிசெய்யப்படும்.

Antigen Rapid பரிசோதனைக்குப் பதிலாக அந்தப் பரிசோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாய் விமான நிலையம் கூறியது.

சென்ற மாதம், சாங்கி விமான நிலையம் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்ட ஆகப்பெரிய நோய்த்தொற்றுக் குழுமமாக உருவெடுத்தது.

100க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்