Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவான கொள்கைகள் : ஆசியாவில் சிங்கப்பூருக்கு முதலிடம்

நன்கொடை வழங்குவோருக்குப் பெரிய அளவில் வரி விலக்குகள் அளிக்கப்படுவதும் அவற்றில் அடங்கும்.

வாசிப்புநேரம் -
அறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவான கொள்கைகள் : ஆசியாவில் சிங்கப்பூருக்கு முதலிடம்

(படம்:Pixabay)

ஆசிய நாடுகளில் அறப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவான கொள்கைகள், வரி-விலக்கு வழங்கப்படுவது ஆகியவை தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சிங்கப்பூர்  முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நன்கொடை வழங்குவோருக்குப் பெரிய அளவில் வரி விலக்குகள் அளிக்கப்படுவதும் அவற்றில் அடங்கும்.

குறிப்பிட்ட சில நன்கொடை திட்டங்களில் பங்கேற்போருக்கு 250 விழுக்காடுவரை வரி விலக்கு அளிக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் எனக் கூறப்பட்டது.

ஆசிய நாடுகளிடையே அத்தகைய ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை.

ஆய்வை நடத்தியது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்.
15 ஆசிய  நாடுகளின் பொருளியல் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன.

சிங்கப்பூர், ஜப்பான், தைவான் ஆகியவை பட்டியலில் முன்னணி வகித்தன. 

சமூகச் சேவைத் துறைக்குத் திறனாளர்களை ஈர்ப்பதில் சிங்கப்பூர் சவால்களை எதிர்நோக்குவதாகவும் ஆய்வு சொல்லிற்று. 

அதே வேளை இணையத்தில் கூட்டாக நிதிதிரட்டும்  "crowdfunding" எனும் முறை பிரபலமாகிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன் தொடர்பில் விதிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்